இத்தாலியில் உள்ள ரசியாவை சேர்ந்தவர் ராபர்ட் ஜான் (49) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் இவருக்கு வேலை பறிபோனது. பல இடங்களில் அலைந்து திரிந்தும் வேலை கிடைக்கவில்லை.
இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. இப்பிரச்சினையால் இவருக்கும், மனைவிக்கும்
இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே ராபர்ட் ஜான் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். தனது 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தான் குடியிருக்கும் கட்டிடத்தின் 6-வது மாடிக்கு ஏறினார். பின்னர், யாரும் எதிர்பாராத நேரத்தில் குழந்தைகளை தூக்கி வீசினார்.
பிறகு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தூக்கி வீசியதில் கீழே விழுந்த 2 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். உடனே, அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து பிரெசிகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீப காலமாக இத்தாலியில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக