புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள கத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் சுதா வயது-17, ப்ளஸ் 2 படித்து தேர்வு எழுதியிருக்கிறார்.இவரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் காணாமல் போய்விட்டார். தன்னுடைய மகளை காணவில்லை என தந்தை ராஜா வடுகப்பட்டி போலீஸில் புகார் செய்திருந்தார்
.



இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளியில் தங்கபாண்டி வயது-28, என்பவருடன் சுதா இருப்பதாக ராஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜா மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சுதாவை தேடி அத்திப்பள்ளிக்கு வந்தனர்.

சுதா மற்றும் தங்கபாண்டியை பார்த்து பேசி, உங்கள் இருவருக்கும் ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் திருமணம் செய்து வைக்கிறோம் என்று சமாதனம் கூறி டாடா சுமோ காரில் அழைத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை அத்திப்பள்ளியில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டனர

சேலம், கரூர் வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந் தனர். அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகில் உள்ள பள்ளப்பட்டி பிரிவு சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு காரை நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு கடையில் ராஜா உள்ளிட்டோர் டீ சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, காரில் இருந்த தங்கபாண்டி காரிலிருந்து இறங்கி வேகமாக வெளியே ஓடினார்.  அப்போது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வேகமாக வந்த ஒரு லாரி தங்கபாண்டி மீது மோதியது.இதில், படுகாயமடைந்த தங்கபாண்டி, கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று அதிகாலை உயிரிழந்தார். தங்கபாண்டிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது.

தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் தங்கபாண்டி லாரிக்குள் விளுதாரா...? அல்லது ராஜா மற்றும் அவரது உறவினர்கள் வரும் அவ்வழியில் ராஜாவை மிரட்டியதால் பயந்து தப்பி ஓடும் போது லாரியில் சிக்கி இறந்து போய்விட்டாரா என்பது குறித்து அரவக்குறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top