பிரிட்டனை சேர்ந்த தாத்தா, விரைவில் பெண்ணாக மாற உள்ளார். இதற்காக ஹோர்மோன் மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள இருக்கிறார்.பிரிட்டனை சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் ஜேம்ஸ்(வயது 80). இவருக்கு ஒன்பது வயதிலிருந்தே பெண்ணாக மாற வேண்டும்
என்ற விருப்பம் இருந்துள்ளது.
என்ற விருப்பம் இருந்துள்ளது.
இருப்பினும் இவருக்கு கடந்த 1961ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தற்போது இவருக்கு நான்கு பேரக்குழந்தைகள் உள்ளனர்.
ஜேம்ஸ் வீட்டில் இருக்கும் போது இரகசியமாக பெண்களின் உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை கண்டுபிடித்த இவரது மனைவியிடம் உண்மையை ஒப்புக்கொண்டார்.
பெண் தன்மையுள்ள ஜேம்சுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லாத இவரது மனைவி, கடந்த 2003ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். இருப்பினும் இவர்கள் இப்போதும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றனர்.
பொறுப்புகள் ஏதும் இல்லாத நிலையில், தன்னுடைய நீண்ட நாள் கனவான பெண்ணாக மாறுவதை தற்போது நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார் ஜேம்ஸ்.
13,500 பவுன்ட் செலவில் வரும் அக்டோபர் மாதம் லண்டனின் பிரபல மருத்துவமனையில் இவருக்கு ஹோர்மோன் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் பெண் உடையை உடுத்தி தன்னுடைய பெயரையும் ரூத்ரோஸ் என மாற்றிக் கொண்டு தனியாக வசித்து வருகிறார். உலகில் அதிக வயதில் பெண்ணாக மாறிய நபர் என்ற பெயரை இவர் பெற உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக