டைட்டானிக்கின் 21ம் நூற்றாண்டு வேர்ஷனாக புதிய கப்பலொன்றை உருவாக்குவதற்கு ஆஸ்திரேலியாவின் பெரும் பணக்கார புள்ளிகளில் ஒருவரான கிளிவ் பால்மர் முடிவெடுத்துள்ளார். இதற்கான சீனாவை தளமாக கொண்ட கட்டுமான நிறுவனமொன்று இத்திட்டத்தை
வழங்கியுள்ளார்.இது தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ள கிளிவ் பால்மர், அடுத்த வருட முடிவில் இப்புதிய டைட்டானிக் கப்பல் கட்டுமான பணிகள் ஆரம்பமாகும். 2016 இல் கடல் பிரயாணத்திற்கு முற்று முழுதாக தயாராகிவிடும்.
முதல் பயணத்தை லண்டனிலிருந்து தொடங்கவிருக்கிறது என தெரிவித்துள்ளார். டைட்டானிக் நிஜ கப்பலின் அதே தோற்றத்தில் ஆனால் நவீன தொழில்நுடபத்தை பயன்படுத்தியும், அதிநவீன நவிகேட்டர் பாதுகாப்பு வசதிகளின் மேம்படுத்தலுடன், இக்கப்பல் உருவாக்கப்படவிருக்கிறது.
டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி 100 வருட நிறைவு தினம் அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில் பால்மர் இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனினும் இக்கப்பல் கட்டுவதற்கான செலவு பற்றிய தகவல்களை அவர் வெளியிட மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக