புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இறந்து விட்டதாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்ட பெண் இறுதிச்சடங்கு செய்யும் போது திடீரென கண் விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம் ரெட்டியூர் டாக்டர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுவேல். அரிசி வியாபாரி. இவரது மனைவி கல்பனா (36). ஆஸ்துமா நோயாளி.
நேற்றுமுன்தினம் இவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானது.

உடனே அவரது குடும்பத்தினர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கல்பனா இறந்து விட்டதாக கூறினர். இதனால், உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். பின்னர், இறுதி சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 9.45 மணியளவில் திடீரென கல்பனாவின் கண்கள் திறந்துள்ளதாகவும், கைகளில் அசைவு ஏற்பட்டதாகவும் உறவினர்கள் கூறினர். உடனே கல்பனாவை சேலத்திலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கல்பனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், மீண்டும் கல்பனாவின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

இறந்தவர் கண் விழித்தார் என்ற தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்காததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top