புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவரின் பேஸ்புக் கணக்கு பேஸ்புக் நிர்வாகத்தால் மூடப்பட்டது. நோய்வாய்ப்பட்ட தனது மகனின் புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக் கணக்கில் பகிர்ந்தமைக்காகவே அவரது கணக்கு முடக்கப்பட்டிருந்தது.குறித்த புகைப்படங்கள்
பொருத்தமற்ற புகைப்படங்கள் எனத் தெரிவித்தே அவரது கணக்கை மூடிய பேஸ்புக் நிர்வாகம், தற்போது தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

டௌண் நோய்க்கூட்டறிகுறி எனப்படும் பிறப்புரிமைக் கூறுகளில் ஏற்படும் நோயைக் கொண்ட மகனின் புகைப்படத்தை குறித்த பெண்மணி பகிர்ந்துள்ளார். இந்த நோய் ஏற்படுவதன் காரணமாக உடல் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, சில வேளைகளில் விகாரமான முக வடிவத்தைக் கொண்ட குழந்தைகளும் பிறப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. 

வடக்கு கரோலினாவைச் சேர்ந்த டியானா கோர்ன்வெல் என்ற இப்பெண்மணி, தனது 7 வயது மகனின் விளையாட்டு விழாவில் இடம்பெற்ற புகைப்படங்களையே பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். 

உள்ளூர் விசேட ஒலிம்பிக் நிகழ்வில் தனது மகன் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிய புகைப்படங்களே அவரால் பகிரப்பட்டுள்ளன. 

புகைப்படங்களைப் பகிர்ந்த பின்னர் அடுத்த தடவை அவர் தனது கணக்கில் உள்நுழைய முற்பட்ட போதிலும், பொருத்தமற்ற புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளதாக பேஸ்புக்கின் இணையத்தள மேற்பார்வைப் பிரிவு அவருக்கு அறிவித்ததுடன், அவரது கணக்கு 3 நாட்களுக்கு முடக்கப்பட்டிருந்தது. குறித்த புகைப்படங்களை அவர் தனது கணக்கிலிருந்து நீக்கிய பின்னரே அவரது கணக்கு மீளச் செயற்படுத்தப்படுவதற்கு பேஸ்புக் அனுமதியை வழங்கியிருக்கிறது. 

எனினும் பின்னர் மன்னிப்புக் கோரிய பேஸ்புக் நிறுவனம், குறித்த தவறு மனிதத்தவறு எனவும் குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்பட்ட தவறுக்கு வருந்துவதற்காகவும், தனது மகனின் புகைப்படங்களை அவர் விரைவில் மீளவும் தரவேற்றுவார் என எதிர்பார்ப்பதாகவும், தனது மகன் குறித்த விளையாட்டுப் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகள், அவரது அனுபவங்களை அவர் பேஸ்புக்கில் பகிர்வார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top