இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பாலியல் தொழிலுக்காக இளம் பெண்களை கடத்தி வந்த நால்வரை பொலிசார் கைது செய்தனர். இந்தியாவை சேர்ந்தவர்கள் அலிமுதீன் முகமது(34), ஷமீனா யூசுப்(32), ஷனாஸ் பேகம்(56), என்கடா பலாபோவி(56). இவர்கள் 4 பேரும் இங்கிலாந்தில் வசிக்கின்றனர்.
இவர்களுடைய நடத்தை சந்தேகத்துக்கு இடமளிக்கும் உள்ளது என்று பொலிசுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் இவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இந்தியாவின் ஐதராபாத் நகரில் இருந்து இளம்பெண்ணை இங்கிலாந்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.
பாலியல் தொழிலுக்காக இளம்பெண்ணை கடத்தி வந்து சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் பொலிசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட இளம்பெண்ணின் பெயரை பொலிசார் வெளியிடவில்லை.இந்த வழக்கில் கானா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் சசி கலா ஓபராய்(53), பல்ராம் குமார் ஓபராய் என்ற தம்பதியையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து 6 பேரும் ஜாமீன் கேட்டு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 7ஆம் திகதி நடக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக