புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கோழித் தகராறில் ஒன்றரை மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் சாலாமேடு விகேஎஸ் நகரை சேர்ந்தவர் உஸ்மான்அலி. இவரது குழந்தை முகமது சுபேர் (48 நாட்கள்). இக்குழந்தையை
கழுத்தை நெரித்து அதே பகுதியை சேர்ந்த ராமு மனைவி ஆதிலட்சுமி (40) நேற்று முன் தினம் கொலை செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழங்கு பதிந்து ஆதிலட்சுமியை தேடி வந்தனர். இந்நிலையில், சாலாமேடு விஏஓ ராஜூவிடம் ஆதிலட்சுமி நேற்று முன் தினம் மாலை சரணடைந்தார். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

ஆதிலட்சுமி அளித்த வாக்குமூலம்: என் கணவர் ராமு. பெயிண்ட் அடிக்கும் கூலி தொழிலாளி. எங்கள் வீட்டு அருகே வசிக்கும் சுனைதா வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் என் வீட்டில் அசுத்தம் செய்து வந்தது. இதனால் எனக்கும், சுனைதாவுக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். என்னை சுனைதா அடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், சுனைதா வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி களை கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷம் வைத்து கொன்றேன்.

இதை எனது கணவரிடம் கூறி சுனைதாவும், அவரது கணவரும் பிரச்னையை பெரிதாக்கினர். இதனால் எனக்கும், என் கணவருக்கும் தகராறு நடந்தது. இதையடுத்து சுனைதா வளர்த்த கோழி களை மட்டும் கொன்றால் போதாது, அவரது பிள்ளைகளையும் கொலை செய்ய முடிவு செய்தேன். உஸ்மான் அலி நேற்று முன் தினம் காலை வெளியே சென்றார். துணிகளை துவைக்க தோட்டத்திற்கு சுனைதா சென்றுவிட்டார்.

வீட்டில் கட்டப்பட்டிருந்த தூளியில் குழந்தை முகமது சுபேர் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது, குழந்தையை தூக்கிக் கொண்டு என் வீட்டின் பின் உள்ள முட்புதருக்கு சென்றேன். அங்கு குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றேன். குழந்தையை தேடிக் கொண்டு சுனைதா மற்றும் பலர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டேன். நான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேட சரணடைந்தேன். இவ்வாறு ஆதிலட்சுமி கூறியுள்ளார். பின் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆதிலட்சுமி கொடுத்த தகவலின்பேரில் ரத்த கறை படிந்த கொல்லப்பட்ட குழந்தையின் துணியை பறிமுதல் செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top