புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கனேடியப் பிரதமர் ஸ்ரிபன் ஹாப்பரின் நிர்வாணப் படத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த ஓவியம் கனடா, ஒன்ராறியோவைச் சேர்ந்த ஓவியர் மாகிரட் சுதர்லாண்ட்டினால் கற்பனையில் ஒயில் பு+ச்சினால் கன்வசில் வரையப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தில் பிரதமர் ஒரு கட்டிலில் நிர்வாணமாக முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் இருக்க அவரைச் சுற்றிலும் ஏனையவர்கள் உடைகளில் இருப்பதைக் காணமுடிகின்றது. இவர்களது முகங்கள் இங்கு தெரியவில்லை. அவரது காலடியில் ஒரு நாய் படுத்திருக்கின்றது. அருகில் தொழில்சார் உடையணிந்த ஒரு பெண் தனது கைகளில் சில்வர் தட்டொன்றில் Tom Hortons கோப்பிக் குவளையை வைத்திருப்பதுபோலத் தெரிகின்றது.

இந்த ஓவியம் பல ருவீற்களை ருவிட்டரில் உலவவிட்டது. சிலர் இதனை ஒரு சிரிப்பிற்கிடமானதென்றும் அவர் கடைசி தனது பெனியனையாவது அணிந்திருக்கலாமென்றும் சிலர் இதுவொரு ஓவியமென்றும் சிலர் இதனைப் பார்த்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமலுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிரதமரின் அலுவலகமும் இதுபற்றிக் குறிப்பிட்டது. அதில் பிரதமரின் பேச்சாளர் உண்மையில் பு+னைப் பிரியர் என்பது எல்லாருக்கும் தெரியுமென்றார். ஓவியத்தில் அவரது காலடியில் ஒரு நாய் இருப்பதைக் குறித்தே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்கொட் பிரிசன் குறிப்பிடுகையில் இந்த ஓவியத்தின்மூலம் பிரதமரிடம் மறைப்பதற்கு எதுவுமில்லையென்று தான் நினைப்பதாகக் கூறினார்.

இதனை வரைந்த சுதர்லான்ட்ட இந்த ஓவியம் உண்மையில் ஒரு கேலியை உண்டுபண்ணுவதற்காகவே வரையப்பட்டதென்று கூறியதோடு சமஷ்டி அரசின் கொள்கைகளினையும் அவர்கள் தமக்குக் கூறும் கருத்துக்களினால் ஏற்படும் சில பொதுவான விரக்திகளைக் காட்டுவதாகவும் தெரிவித்தார். அரசின் கொள்கைகளினால் வெறுத்துப்போனதாலேயே சுதர்லான்ட் இவ்வாறான ஓவியத்தை வரைந்துள்ளார் என்பது வெளிப்படை.

இந்த ஓவியத்தின் தலையங்கம் Emperor Haute Couture என்பதுதான். இது உண்மையில் The Emperor’s New Clothes என்ற ஹான்ஸ் கிறிஸ்ரியன் அன்டர்சனின் கதையில் வருவதுபோல புதிய உடையென்று நினைத்து நிர்வாணமாக வெளியில் நடைபோடும் அரசரைப் போலத்தான் இது உள்ளது.

இந்த ஓவியர் வழமையாகவே நிர்வாண ஓவியங்களையே வரைந்துவருபவராக இருந்தாலும் தற்போது அவர் வரைந்து பிரதமரின் ஓவியந்தான் அனைவராலும் பேசப்படுவதாக உள்ளது.
இதன் பெறுமதி 5,000 டொலராக உள்ளது. தற்போது இதனை கிங்ஸ்ரன் பொதுநூலகத்தில் வைத்துள்ளனர். இந்த ஓவியத்தினை ஒரு துணிகரமான செயலென அந்நூலகத்தின் தலைவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், சுதர்லாந்தின் ஓவியமானது இறுதியில் கூறும் செய்தியாக திரு.ஹாப்பர் தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லையென்பதைத்தான் வெளிப்படுத்துகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top