பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க் தனது நிண்டநாள் தோழியும், காதலியுமான Priscilla Chan ஐ திருமணம் முடித்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இத்திருமணம் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் 100 பேருக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதையடுத்து மார்க் சூக்கர் பேர்க் தனது பேஸ்புக் டைம்லைனில், 'Married' என தனது ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார். மேலும் அவர்களது திருமண புகைப்படம் பேஸ்புக்கில் பதிவேற்றம் செயப்பட்ட போது 30 நிமிடத்தில் 131,000 பேரால் லைக் செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சூக்கர்பேர்க் தனது 28வது பிறந்த தினத்தை கொண்டாடியிருந்தார். அதே கிழமையில் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பிரிவில் சான் பட்டம் பெற்றிருந்தார்.
அப்போது சூக்கர் பேர்க் தனது பேஸ்புக் பக்கத்தில், Dr.Chan, உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என கூறியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேஸ்புக் தனது பங்குகளை Nasdaq வர்த்தக சந்தையில் விற்பனை செய்ய தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக