புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் பொட்டல்மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38), பீடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி திலகவதி (வயது 30). இவர்களுக்கு சித்ராபானு(10), ஜெயலட்சுமி (10), மஞ்சுளா (7) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் திலகவதிக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கமானது அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த முருகன் திலகவதியை கண்டித்தார். ஆனால் அவர் செல்வராஜூடனான காதலை கைவிடவில்லை.

சம்பவத்தன்று 3 குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு சென்ற திலகவதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதேப்போல் பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜையும் காணவில்லை. இதனால் 2பேரும் ஊரை விட்டு சென்றது தெரியவந்தது.

செல்வராஜ் வீட்டை விட்டு செல்லும் போது 1 லட்சம் ரூபாயை வீட்டில் இருந்து எடுத்து சென்றுள்ளார். மனைவி, குழந்தைகள் காணாதது குறித்து முருகன் சுரண்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் செல்வராஜ் திலகவதியை கடத்தி சென்றுள்ளதாக கூறியுள்ளார். புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் விசாரணை நடத்தி 2 பேரையும் தேடி வருகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top