புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலியில் இன்று அதிகாலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடக்கு இத்தாலியில் உள்ள பலோக்னா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் குலுங்கின.நிலநடுக்கம் ஏற்பட்டபோது நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு
வெளியேறினார்கள். பின்னர் ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

தொடக்கத்தில் 6.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. பலோக்னா அருகே பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் 5.9 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஜனவரி மாதம் இத்தாலியின் வடக்கு பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஜெனோவா, பலோக்னா, துரின் மற்றும் மிலன் நகரில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top