புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உல்லாசத்துக்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் அவளது தம்பி கொடூரமாக கொலை செய்யப்பட்டான். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பழைய டவுன் காவல் நிலையம் அருகே உள்ள நடைபாதையில் வசிப்பவர் வில்லியம்ஸ். இவரது
மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள், ஜான்(5) என்ற மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த மஞ்சுளா, அதே பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி விழா நடந்தது. இதற்காக மஞ்சுளா தனது குழந்தைகளுடன் சென்றார். பின்னர் இரவு நடந்த நாடகத்தை பார்த்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத ஒருவர், 15 வயது சிறுமியை உல்லாசத்துக்கு அழைத்ததாக தெரிகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அந்த நபர், நீ வரவில்லை என்றால் உனது தம்பியை தூக்கி சென்று கொன்று விடுவேன் என மிரட்டினாராம். இன்று அதிகாலை 2 மணியளவில் சிறுவன் ஜான் திடீரென மாயமானான். அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அரக்கோணம் ராஜாஜி சந்து தெரு அருகே உள்ள கால்வாய் பகுதியில் ஜான் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

அவனது தலை, கல்லால் தாக்கி நசுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனை கொலை செய்தது யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள 10க்கும் அதிகமான ஆட்டோ டிரைவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top