மனைவி செல்லமாக வளர்த்த பூனைகளின் தொந்தரவு தாங்க முடியாமல், விவாகரத்து செய்துள்ளார் கணவன்.ஆசைக்கு ஒன்றிரண்டு வளர்த்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது, 550 பூனைகளை வளர்த்தால் யாருக்கு தான் கோபம் வராது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலை சேர்ந்த தம்பதி, திருமணமான புதிதில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். மனைவிக்கு பூனைகள் மீது பாசம் அதிகம். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பூனைகள் தான் வளர்த்தார்.
நாளடைவில் குட்டி போட்டு 550 பூனைகள் வீட்டின் எல்லா பகுதிகளையும் ஆக்கிரமித்தன. ஒன்றிரண்டு பூனைகளை மனைவி வளர்த்த போது, அவற்றை கணவன் கொஞ்சி மகிழ்ந்தார். ஆனால், பூனை குடும்பம் பெருகி விட்ட பின் தலைவலி ஆரம்பமானது.
எந்த பூனையும் தரையில் படுப்பதில்லை. கணவன் மனைவி உறங்கும் மெத்தையில் படுத்து உறங்கின. கோபம் அடைந்த கணவன் அவற்றை விரட்டினார்.
ஆனால் மனைவி கொடுத்த செல்லத்தால் படுக்கையை விட்டு ஒரு பூனைகூட நகரவில்லை. அத்துடன் “மியாவ்” என்ற சத்தம் காதை குடைந்தெடுத்தது. பாத்ரூமை பயன்படுத்த முடியவில்லை. டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தால், திடீரென பாய்ந்து வரும் பூனைகள் தட்டில் இருக்கும் உணவை கவ்வி கொண்டு சென்றுவிடும்.
எல்லை மீறிய பூனைகளின் அட்டகாசத்தால் அவற்றை விரட்டிவிட்டு குடும்பம் நடத்த வரும்படி மனைவியை எச்சரித்தார். அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து இஸ்ரேலில் உள்ள ராப்பினிகல் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார் அப்பாவி கணவன். மனைவியின் செல்ல பிராணி வளர்ப்பால் கணவன் படும் அவஸ்தையை கருத்தில் கொண்டு அவருக்கு நீதிமன்றம் விவாகரத்து அளித்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக