மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறைப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய
பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த இப்பாடசாலை மாணவியை அதேபகுதியினை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கண்களையும் கைகளையும் கட்டி மறைவான இடத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சிலாவத்துறை காவல்துறையில் இது தொடர்பாக முறைப்பாடு செய்த நிலையில் சிறுமி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலைகொண்டுசெல்லப்பட்டுள்ளார்
இதேவேளை இந்த மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காவல்துறயினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் ஏ. யூட்சன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக