ஜேர்மனியிலிருந்து போஸ்னியாவிற்கு அழைத்து வரப்பட்ட சிறுமியை 8 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்து வைத்து குடும்பத்தினர் கொடுமை செய்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.மிலெங்கோ மற்றும் ஸ்லோவோஜ்கோ தம்பதியினர் போஸ்னியாவில் உள்ள துஸ்லா பகுதியின்
வடமேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஒரு சிறுமியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அருகில் இருப்பவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், தற்போது அந்த பெண்ணுக்கு 19 வயது ஆகிறது.
பன்றி சாப்பிடும் உணவுகளையும், குதிரைக்கு பதிலாக இந்த பெண்ணை வண்டி இழுக்கச் செய்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இந்த சிறுமி பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக