26 வயதான இளைஞர் ஒருவரின் மூக்கை 40 வயதான பெண்ணொருவர் கத்தியால் வெட்டித் துண்டித்த சம்பவம் மாத்தறை கொடகும்புற பகுதியில் இடம்பெற்றுள்ளது.மேற்படி பெண், கடந்த டிசெம்பர் மாதம் தனது கணவரை விவகாரத்துச் செய்தவரெனவும் இவ்வருடம் தன்னை திருமணம்
செய்வதாக அந்த இளைஞர் அளித்த வாக்குறுதியை மீறியதால் அவரின் மூக்கை அப்பெண் கத்தியால் வெட்டித் துண்டாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விருவரும் தமது சட்டவிரோத உறவை சுமார் 6 வருடங்களாக தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தேயிலை தொழிற்சாலையொன்றில் உதவியாளராக பணியாற்றும் மேற்படி இளைஞர் காயமடைந்த நிலையில் தெனியாய அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பல சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக