கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நாம் வினவிய போது பதிலளித்த பல்கலைக்கழக மாணவர் சங்க சிரேஷ்ட உறுப்பினர் பிரேமகுமார டி சில்வா, இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார்
இதேவேளை, இது குறித்து நாம் ஆராய்ந்த போது மேலும் சில மாணவிகளும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால், அதனை பிரபல்யமடையச் செய்யாது தடுக்கும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக