புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணத்தில் இருந்து இலண்டன் சென்ற 23 வயதான பெண் தற்கொலை முயற்சி செய்து உயிர் மீண்டு விவாகரத்து நிலையை எதிர்நோக்கியுள்ள சம்பவம் இலண்டனில்
இடம்பெற்றுள்ளது.வலிகாமம் பகுதியைச் சேர்ந்து குறிப்பிட்ட யுவதி இலண்டன் குடியுரிமை பெற்ற வலிகாமம் பகுதி இளைஞர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.
திருமணமாகி ஒரு வருடங்கள் கழியாத நிலையில் இப் பெண் தற்கொலைக்கு முயன்று குளியலறை துப்பரவு செய்யும் ஒரு வகைத் திரவத்தை அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
இதற்கான காரணம் என்னவெனின் இலண்டன் வந்த குறிப்பிட்ட பெண் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்கும் போது நட்பாயிருந்து தற்போது இலண்டனில் உள்ள சில பாடசாலை நண்பர்களை இலண்டன் வந்த பின் தனது முகப் புத்தகத்தில் சேர்த்திருந்தார். அத்துடன் அவர்களுக்கிடையில் முகப்புத்தகம் மூலம் தொடர்புகளைப் பேணி வந்ததாகத் தெரியவருகின்றது.
இந் நிலையில் மனைவியின் முகப்புத்தகத்தில் உள்ள நண்பர்கள் யார் என அறிய கணவன் ஆவல் கொண்டு கேட்டும் மனைவி அதைத் தெரிவிக்க முற்படவில்லை என தெரியவருகின்றது. இது தொடர்பாக முறுகல் நிலை ஏற்பட்டு மனைவிக்கு கொடுத்திருந்த தனிப்பட்ட கைத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதன் பின்னர் மடிக் கணனியில் ஏதோ தில்லு முள்ளுகள் செய்த கணவன் மனைவியின் முகப் புத்தகத்தை ‘லொக் ஒவுட்’ செய்த பின்னரும் பார்ப்பதற்கான வசதியை செய்துள்ளார். இதன் பின்னர் மனைவியும் இலண்டன் பகுதியில் உள்ள மனைவிக்கு தெரிந்த இளைஞனும் தான் வேலைக்கு சென்ற பின் சில இடங்களில் சேர்ந்து திரிந்துள்ளதை முகப் புத்தகம் மூலம் அறிந்து இது தொடர்பாக மனைவியிடம் சகலதையும் போட்டுடைத்து சண்டையிட்டுள்ளார்.

தனது முகப் புத்தகத்தை; தனது அனுமதி இல்லாது பார்த்தால் பெரும் கோபமடைந்த மனைவி அதன் கணவன் வெளியே சென்றபின் குளியலறையில் துப்பரவு செய்யும் திரவம் ஒன்றை குடித்து கணவருக்கு அதனைத் தெரிவித்து எனது சாவிற்கு நீதான் காரணம் எனவும் தெரிவித்தவுடன் கணவர் பொலிசாருக்கு உடனே அறிவித்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top