புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புற்றுநோய் என்றாலே அது உடலில் பல்வேறு பாகங்களை பல்வேறு விதத்தில் பாதித்து, இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.ஆனால் சரும புற்றுநோய் என்பது நிவாரணம் பெறக்கூடிய நோய் என்பது ஒரு சிலர் அறிந்திராதத் தகவலாகும்.


சருமப் புற்றுநோய் பல வகைப்படும். அதில் ஒரு சில வகை புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உடனடியாக குணம் பெறலாம்.

ஒரு சில புற்றுநோய்கள் உயிரையே பறிக்கும் அளவிற்கு போகலாம். அதாவது அதிக வெயில் நமது சருமத்தின் மீது படுவதால் புற்றுநோய் வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் வெயிலே படாமல் இருந்தாலும் நமது சருமம் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சருமத்தில் சிறுசிறு கட்டிகள் தோன்றுவது, அந்த கட்டிகளில் இருந்து அவ்வப்போது ரத்தம் கசிவது அவை எந்த சிகிச்சையினாலும் குணமடையாமல் நாள்பட்ட கட்டியாக மாறுவது போன்றவை ஒரு வகை சரும புற்று நோயாகும்.

ஆனால் உடலில் சூட்டினால் ஏற்படும் கட்டிக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சூரிய ஒளியினால் பாதிக்கப்பட்டு ஏற்படும் ஒரு வகை சருமப் புற்றுநோய் ஏற்பட்ட தோல், சிவந்து தடித்து காணப்படும். சில சமயம் தோலில் கீறல்கள் ஏற்பட்டு ரத்தம் வழியும். மேற்கூறிய இரண்டு சரும புற்று நோய்களையும் ஆரம்பத்தில் கண்டறிந்தால் நிவாரணம் பெறலாம்.

மெலனோமஸ் எனப்படும் சருமம் கருப்பாக மாறும் புற்றுநோய் வகை சற்று மோசமான புற்றுநோயாகும். ஒரு மச்சம் போல ஆரம்பித்து நாளடைவில் அது பெரிதாகிப் கொண்டே போகும். இதில் நிறமாற்றம், வடிவ மாற்றம் அளவு மாற்றங்கள் புற்றுநோய் முற்றுவதன் அறிகுறிகளாகும்.

அரிப்போ, வலியோ எதுவும் இல்லாமல் சருமத்தில் ஏற்படும் பாதிப்பு மெர்க்கல் சரும புற்றுநோயாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. தோல் தடித்து சிவப்பு அல்லது வேறு நிறங்களில் மாறும். இவற்றை உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top