ஜேர்மனியில் ஆதரவற்ற அகதிகளாக குழந்தைகள் வலம் வருவது தற்போது அதிகரித்துள்ளது. இந்த குழந்தைகளுக்கு கூடுதல் உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என பல்வேறு சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி
வருகின்றன.பெற்றோரோ, உறவினரோ இல்லாத அகதிக் குழந்தைகள் ஜேர்மனியில் 3000 முதல் 6000 பேர் வரை இருக்கின்றனர்.
இந்த குழந்தைகள் பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் ஈராக் நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். இவர்களுக்கென்று குரல் கொடுக்க எவருமில்லை என்று ப்ரோ அஸைல் அமைப்பின் இயக்குநர் கூண்டர் புர்கார்ட் தெரிவித்தார்.
இந்த அகதிக் குழந்தைகள் ஜேர்மன் நாட்டின் மொழியைப் படிக்கவும், பண்பாட்டை அறியவும் சிறிது காலம் ஆகும். அதுவரையிலும் அவர்களுக்கு உதவ ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.
ஜேர்மனியில் பல சமூக நல அமைப்புகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, டார்ட்மண்டில் உள்ள ஓர் அமைப்பில் ஃபிராங்க் பைண்டா என்பவர் அகதிச் சிறுவர்களின் பிரச்னைகளுக்கு ஆலோசகராக விளங்குகிறார்.
இவர் பணிபுரியும் அகதி நலவிடுதி, இச்சிறுவர்களுக்கு புதிய நாட்டின் மொழியை முதலில் கற்றுத் தருகிறது. பின்பு ஓர் பாதுகாவலரை நியமிக்கின்றது, மருத்துவ சேவையும் மனநலப் பாதுகாப்பும் வழங்குகின்றது.
டார்ட்மண்டில் உள்ள அகதி நல விடுதி 40 சிறுவர்களை மட்டுமே பாதுகாக்க முடியும். ஆனால் கடந்த ஆண்டு இந்த ஊருக்கு வந்த அகதிச் சிறுவர்களின் எண்ணிக்கை 400 ஆகும். இந்நிலையில் இவர்களுக்கு மேலும் பல நல விடுதிகளை ஆரம்பிக்கவும், நடத்தவும் அரசு முயல வேண்டும் என்று பைண்டர் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக