கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றத்தை சேர்ந்தவர் குணசேகரன் (36). இவர் அமைந்தகரை போலீசில் கண்ணீர் மல்க இன்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ’’நான் நெற்குன்றம் கோதண்டராமன் தெருவில் மனைவி சரிதா (28), குழந்தைகள் லோகநாயகி (5), ஜெயப்பிரகாஷ் (4) ஆகியோருடன் வசித்து வருகிறேன்.
நான் பகலில் வேலைக்கு சென்று விடுவேன். அப்போது எனது மனைவிக்கும், வீட்டுப் பக்கத்தில் உள்ள டெய்லர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 17-ந்தேதி எனது மனைவியும் அந்த வாலிபரும் ஓடிவிட்டனர்.
அப்போது வேலூரில் இருந்ததை கண்டுபிடித்து எனது மனைவியிடம் நடந்ததை மறந்து விடுகிறேன். திருந்தி வாழ வா என்று அழைத்து வந்தேன். திருந்தி வாழ்வார் என்று நினைத்தேன். அவள் திருந்தவில்லை. மீண்டும் அந்த வாலிபருடன் தொடர்பு வைத்திருந்தார். நான் அந்த வாலிபரையும் பலமுறை கண்டித்தேன்.
அவள் காதலை மறப்பதற்காக அமைந்தகரையில் உள்ள எனது சகோதரி வீட்டில் மனைவி குழந்தை களை கொண்டு விட்டேன்.கடந்த 29-ந்தேதி மீண்டும் வீட்டை விட்டு ஓடிவிட்டாள். 2 குழந்தைகளும் தவிக்கின்றன. எனது மனைவியை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக