புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையில் முதல் முறையாக வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சேனாரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.களுத்துறை, பகியங்கல, பகீன்
வளைவு தொல்பொருள் பிரதேசத்திலேயே இந்த மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாறுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புக்கூடு முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, அம்பலாந்தோட்ட, ஹங்கமவில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புத்தொகுதி கண்டுபிடிக்கப்பட்ட போதும் அது முழுமையாகனதாக இருக்கவில்லை.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடு, 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்கக் கூடும் என்று கலாநிதி சேனாரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top