சவூதி அரேபியாவில் பலாத்காரமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்களை மீட்க விரைந்து செயல்படுவதாக சவூதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பணிப் பெண்கள் சிலர் சவூதியின் ரியாத் நகரிலுள்ள வீடொன்றில் பலாத்காரமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சவூதி பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து தாம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு சவூதி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ரியாத்தில் உள்ள 5 மாடி கட்டடம் ஒன்றில் 11 இலங்கை பணிப்பெண்கள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த சவூதி பொலிஸார் மேலதிக விபரங்களை உடனடியாக வெளியிடவில்லை.
இருந்த போதிலும், இவர்களை மீட்பதற்கு விரைந்து செயல்படுவதாக இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கு சவூதி பொலிஸார் உறுதி வழங்கியுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக