புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆம்பூர் அருகே உள்ள வடபுதுபட்டு கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் தண்ணீர் எடுக்க சென்றார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த சம்பத் மகன் தீபன்(31) கண்ணையன் மகன் அய்யப்பன்(28), ராதாகிருஷ்ணன் மகன் மகேஷ்(27) ஆகியோர் அங்கு
வந்தனர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை தூக்கி சென்றுள்ளனர். அங்குள்ள மறைவில் வைத்து தீபன் அந்த இளம்பெண்ணை கற்பழித்தார்.

அப்போது அய்யப்பன் இளம்பெண் கை, கால்களை பிடித்துள்ளார். மகேஷ் இளம்பெண் கற்பழிக்கப்பட்டதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த கற்பழிப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு கயல்விழியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி விசாரணை நடத்தினார். தீபன், அய்யப்பன், மகேஷ் ஆகியோர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான 3 வாலிபர்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கும்பலால் சீரழிக்கப்பட்ட இளம்பெண் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சினிமா காட்சிகளை மிஞ்சும் இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top