புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மதுரை மாவட்டத்தில் தனது 11 வயது மகளை கற்பழிக்க கள்ளக்காதலனுக்கு அனுமதி வழங்கிய தாயை பொலிசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் குப்புமணி(35). அவருக்கு திருமணமாகி 11 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கும்
வண்டியூரைச் சேர்ந்த கான்டிராக்டர் ரவி(45) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 15ம் திகதி குப்புமணியைப் பார்க்க ரவி சக்கிமங்கலத்திற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த குப்புமணியின் மகள் அவரது கண்களில் பட்டார்.

குப்புமணியும் தனது மகள் என்று கூடப் பார்க்காமல் அவரை ரவி சீரழிக்க அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து ரவி 11 வயது சிறுமியை சீரழித்துள்ளார்.

கடந்த 16ம் திகதி வலியால் துடித்த சிறுமியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தான் சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் தந்தை பொலிசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் குப்புமணியை கைது செய்தனர்.

கன்னியாகுமரிக்கு தப்பியோடிய ரவி நேற்று கைது செய்யப்பட்டார். பெற்ற தாயே தனது மகளின் வாழ்க்கை கெடுப்பதற்கு காரணமாக இருந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top