சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைப்பதற்காக சென்றுள்ள சீனக்குழுவினர் 50 வகையான உணவுப்பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.சீன அரசு “ஷென்ஷோ-9” என்ற விண்கலம் மூலம் “லியூ யாங்” (33) என்ற பெண் உட்பட 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது.
இவர்கள் விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக விண்வெளியில் 13 நாட்கள் தங்கி, பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக 50 வகையான உணவு பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.
அவர்களில் லியூ யாங் என்ற பெண் குறைந்த வகையான கொழுப்பு சத்துக்கள் கொண்ட சைவ உணவு வகைகளை எடுத்துச்சென்றுள்ளார்.
இவை தவிர உணவுக்கு பிறகு சாப்பிடும் திண்பண்டங்கள், பழவகைகள், சொக்லேட்டுகளையும் கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவலை சீன விண்வெளி துறையின் டைரக்டர் ஜெனரல் சென் ஷன்குவாங் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக