புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மனைவியின் தங்கையான 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி, கலத்தமடு, முருகன் கோயில் வீதியில் இந்தச்
சம்பவம் நடந்துள்ளது.

இந்த சிறுமி கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார். திருமணமாகாத சிறுமி குழந்தைப் பிரசித்தமை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, சிறுமி தனது மூத்த சகோதரியுடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. மூத்த சகோதரி இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொழில்வாய்ப்பொன்றின் மூலம் வெளிநாடு சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிறுமி, சகோதரியின் வீட்டில் பெற்றோரும், பாதிக்கப்பட்ட சிறுமியும், சகோதரியின் கணவரும், அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

சகோதரியின் கணவர், சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

2011ஆம் ஆண்டு முதல், சிறுமியை அந்த நபர் தொடர்ந்தும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் சிறுமி கர்ப்பம் தரித்து, குழந்தையைப் பிரசவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top