ஜேர்மனியில் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி, அவர்களது பணம், சொத்துகளை அபகரித்து படுகொலை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.ஜேர்மனியில் பெர்லின் மாகாணத்தை சேர்ந்த 23 வயது நபர் ஒருவர், 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை காதலிப்பது போன்று நடித்து
ஏமாற்றியுள்ளார்.
இந்த பெண்ணை கொலை செய்து, இவரின் காப்பீட்டு திட்டத்தை(245,000 யூரோ) தன் வசப்படுத்துவதே காதலனின் நோக்கமாகும்.
இதற்கு 26 வயதுடைய ஒரு பெண்ணும், 21 வயதுடைய அவளது சகோதரரும் உதவி புரிந்துள்ளனர். இவர்கள் பணத்திற்காக கொலை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் திடீரென ஒருநாள் காதலியை பூங்காவிற்கு அழைத்து சென்ற காதலன், கொலைக்கார கும்பலுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 21ஆம் திகதி இந்த பெண்ணின் சடலம் பூங்காவின் அருகில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், நடுத்தர வர்க்கத்திலான ஆண்கள் பணக்கார பெண்களை ஏமாற்றி, அவர்களது சொத்துகளை அபகரிப்பது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக