யாழ். சுன்னாகம் பகுதியில் ஆரம்பப் பாடசாலை மாணவியை பீடா தருவதாக ஆட்டோவில் ஏற்றிச் சென்று பாலியல் வல்லுறவு மேற்கொண்ட நபர் இளைஞர்களால் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டார்.இருந்தும் இளைஞர்கள் அவனை பொலிசாரிடம் கையளிக்காது கட்டி வைத்து
தாக்குதல் மேற்கொண்ட போது பொலிசார் இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தி குறிப்பட்ட நபரை மீட்டுக் கொண்டு சென்றுள்ளார்கள்.
இன்று காலை குறித்த பீடா வியாபாரி சிறுமியை சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
இதன் பின்னர் தலைமறைவான பீடா வியாபாரியை இன்று மாலை தேடிப் பிடித்த இளைஞர்கள் அவன் மீது தாக்குதல் மேற் கொண்டு கட்டி வைத்திருந்துள்ளனர்.
பொலிசார் குறிப்பட்ட நபரை கைது செய்ய முற்பட்ட போது இளைஞர்கள் பொலிசாரின் மீது நம்பிக்கையற்று அவனை விடுவிக்காததால் கூடியிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் மேற் கொண்டு குறிப்பிட்ட வியாபாரியை கைது செய்துகொண்டு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக