குழந்தை இறந்தது கூட தெரியாமல், இணையதளத்தில் மூழ்கியிருந்த ஜப்பானிய பெண்ணை, போலீசார் கைது செய்துள்ளனர்.ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ளது ஓட்சு நகரம். இந்த பகுதியை சேர்ந்தவர் யுமிகோ தகாஷி,29. இவருடைய, 19 மாத குழந்தைக்கு, கடந்த
ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி, காய்ச்சல் இருந்தது. ஆனால், இதை கண்டு கொள்ளாமல், கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து, பல மணி நேரம் இணையதளத்தில் மூழ்கியிருந்தார் தகாஷி. மறுநாள் காலை, குழந்தை கட்டிலில் இறந்து கிடந்ததை பார்த்துள்ளார்.
இந்த பெண்ணுக்கு, முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து விட்டது. இவர், கம்ப்யூட்டரில் இணையதளத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, விளையாடிக் கொண்டிருந்த இரண்டாவது குழந்தை, பால்கனியில் தவறி விழுந்து, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டது. தற்போது, மூன்றாவது குழந்தையும் இறந்துள்ளதால், இவர் குழந்தைகளை அலட்சியம் செய்ததாக கூறி, நேற்று முன்தினம், ஜப்பானிய போலீசார், இவரை கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக