புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ராஜஸ்தான், ஜெய்ப்பூர் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஜடோலியில் பள்ளிக்கூட மாணவியொருவர் 5 வாலிபர்களால் 20 நாட்களாக கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.இம்மாணவி பள்ளி தேர்வு விடுமுறைக்காக தனது அத்தை வீட்டிற்கு
வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 4ம் திகதி, மாணவியை அவரது அத்தை வீட்டிலிருந்து காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்தனர். ஜூன் 24 ஆம் திகதி அஜ்மீர் சாலையில் அம்மாணவி இருப்பதாக தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து சென்று அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று மாலை மீண்டும் காவல் நிலையம் வந்து மாணவியின் பெற்றோர்,  ஐந்து வாலிபர்கள் கடத்தி, கடத்தப்பட்ட 20 நாட்களும் தொடர்ந்து கற்பழித்ததாக புகார் அளித்தனர்.

அந்த ஐந்து வாலிபர்களில் ஜெகதீஷ், பன்வர்லால் மற்றும் பிரபு ஆகியோர் பற்றி மாணவி அடையாளம் தெரிவித்துள்ளதாகவும் சுனில் மற்றும் சக்தி சிங் ஆகியோர் யார் என்று தெரியவில்லை என்று மாணவி கூறியதாகவும் பொலிஸாரிடம் பெற்றோர் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட மாணவியை அஜ்மீர் கிராமத்தை அடுத்த காட்டுப் பகுதியில் காரில் வைத்து தொடர்ந்து இருபது நாட்கள் ஐந்து பெரும் மாறி மாறி கற்பழித்ததாகவும், மாணவிக்கு உணவு மற்றும் தூக்கம் ஆகியவை அந்தக் காரிலேயே வழங்கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த பொலிஸார், மருத்துவ பரிசோதனை ஆய்வறிக்கைக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் இதுகுறித்த தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top