புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாடசாலை அதிபர் ஒருவரின் திருவிளையாடல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியுள்ளது.தனது பாடசாலையில் கல்வி கற்கும் எட்டு முதல் 13 வயது வரையான மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர்
திவுலபிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், இன்று வியாழக்கிழமை மாலை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரிவிற்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், மேற்படி அதிபரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 9 மாணவிகளும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரிவிற்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான அதிபர், பாடசாலை முடிவடைந்த பிறகு பல்வேறு கல்வி நடவடிக்கைகளை காரணம் காட்டி மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து வந்துள்ளமை தொடர்பாக கிடைக்கப் பெற்ற சாட்சிகளின் அடிப்படையில், திவுலபிட்டிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மினுவாங்கொட நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top