உலகளாவிய நேரப்படி, இன்று சனிக்கிழமை இரவு ஒரு விநாடி நேரம் அதிகரிக்கும் என சர்வதேச நேரக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதாவது ஜூன் மாதம் 30ஆம் திகதி இரவு(சனிக்கிழமை) 11:59:59 மணிக்குப் பிறகு, ஜூலை 1ஆம் திகதிக்கு(ஞாயிற்றுக்கிழமை) முன் 11:59:60 என்று
ஒரு விநாடி நேரம் அதிகரிக்கும்.
இந்த நேர மாற்றத்தை அனைவரும் திருத்திக் கொள்ள வேண்டும் என்று பிரான்சின் தலைநகர் பாரீசில் செயல்பட்டு வரும் சர்வதேச புவியியல் ஆராய்ச்சி மையத் தலைவர் டேனியல் காம்பிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக