புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தைவானில் தொடர்ந்து 40 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.தைவானில் தெற்கில் உள்ளது டைவான் என்ற பகுதி. இங்குள்ள இணையத்தள நிலையத்திற்கு கடந்த 13ஆம் திகதி சுவாங்(வயது 18) என்ற இளைஞர் வீடியோ கேம் விளையாட வந்தார்..


தொடர்ந்து 40 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி, மேஜை மீது தலை வைத்து படுத்திருந்த சுவாங்கை இணையத்தள ஊழியர் ஒருவர் எழுப்பினார்.

மயக்க நிலையில் இருந்த சுவாங்கை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சுவாங் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இடைவிடாமல் வீடியோ கேம் விளையாடியதால் நுரையீரலும், இதயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த பிப்ரவரி மாதம 23 மணி நேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய இளைஞர் ஒருவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top