புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புதியவன். இவரது மகன் புதியராஜா (வயது 19). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் படித்து வந்தார்.


புதிய ராஜா பிளஸ்-2 படித்த போது நெல்லை பழைய பேட்டையைச் சேர்ந்த முருகன் மகள் சுந்தரி (வயது 18) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து புதிய ராஜா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்லாமல் கட் அடித்து விட்டு சுந்தரியை கடத்திச் சென்று திருமணம் செய்தார். பின்னர் காதல் மனைவியை புதூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். அப்போது அவரது தந்தை, பாதியில் விட்ட படிப்பை முடிக்க அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து புதியராஜா மீண்டும் பொள்ளாச்சி கல்லூரியில் ரூ. 70 ஆயிரம் பணம் செலுத்தி சேர்ந்தார். காதல் மனைவியை பிரிந்து 1 வாரம் பொள்ளாச்சியில் தங்கி படித்த புதிய ராஜாவுக்கு மனைவியை பார்க்காமல் இருக்க முடியவில்லையாம். இதனால் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்லாமல் மீண்டும் ஊருக்கு வந்தார்.

இதனால் அவரது தந்தை சத்தம் போட்டார். இதில் மனம் உடைந்த புதியராஜா விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top