புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிறந்து இறந்த ஒருநாளான இரு சிசுக்களை தென்மராட்சிப் பகுதியில் பற்றைக்குள் இருந்து பொலிஸார் மீட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸ் பொறுப்பதிகாரி எல்.பி.ரி பத்திரன தெரிவித்தார்.ஒன்று எழுதுமட்டுவாள், மிருசுவில் பகுதியிலிருந்தும் மற்றையது மந்துவில் கிழக்கு
பகுதியிலிருந்துமே இவ்விரு சிசுக்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சிசுக்களில் ஒன்று ஆண் மற்றையது பெண் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சிசுக்களை வீசிய தாய்மார் என சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் கைது செய்யப்படடுள்ளதுடன், அவர்கள் மருத்துவ பரிசோதனை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிசுக்கள் இரண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top