திருக்கோவிலூர் அருகே ஏனாதிமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சி ராணி (வயது 23). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கும் வளவனூர் குருவிபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் செல்வம் (33) என்பவருக்கும் கடந்த 1.6.2012 அன்று திருமணம்
நடை பெற்றது.
செல்வம் சென்னை அரசு தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே திருமணம் செய்த நாள் முதல் ஜான்சிராணியிடம் செல்வம் தாம்பத்ய உறவு வைத்து கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி ஜான்சிராணி கேட்கும் போதெல்லாம் குறையான படிப்பு படித்துள்ளதாக காரணம் கூறி செல்வம் உறவு வைத்து கொள்ள மறுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஜான்சிராணி நேற்று இதுகுறித்து செல்வத்திடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து செல்வமும், அவரது தந்தை ராதாகிருஷ்ணனும் ஜான்சிராணியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு விட அழைத்து வந்தனர். விழுப்புரம் புதிய பஸ்நிலையத்திற்கு வந்த அவர்கள் ஜான்சி ராணியை அங்கேயே விட்டு விட்டு மாயமாகி விட்டனர்.
இதையடுத்து ஜான்சிராணி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது கணவன் செல்வம் ஆண்மை இல்லாதவர் என்றும் இதனை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறி உள்ளார். போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக