அமெரிக்காவில் காதலியை கொன்று விட்டு, விமானத்தை கடத்தி தப்பிக்க முயன்ற காதலனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவை சேர்ந்த பிரையன் ஹெட்ஜ்லின்(வயது 40) என்பவர் ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவரது காதலியான கிறிஸ்டினா கடந்த சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், பிரையன் தான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பிரையனை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக இறங்கினர்.
இதனை அறிந்த ஹெட்ஜ்லின் என்ன செய்வதென்று தெரியாமல், செயின்ட் ஜார்ஜ் விமான நிலையத்தின் ஓடு பாதைக்குள் அத்து மீறி நுழைந்து, அங்கிருந்த விமானத்தை கடத்தி தப்பிக்க முயன்றார்.
ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கார் பார்க்கிங் ஏரியாவில் விழுந்தததில், என்ஜின் தீப்பிடித்தது.
உடனடியாக பொலிசார் அந்த விமானத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பிரையன் ஹெட்ஜ்லின் இறந்து கிடந்தார்.
அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக