பிரிட்டன் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள, வாழ்நாளில் 43 வாரங்கள் செலவிடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.பிரிட்டனில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம், சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.
1,000க்கும் அதிகமான பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு ஆண்டில் 91 மணி நேரமும், வாழ்நாளில் 43 வாரங்களும் ஒப்பனைக்காக பிரிட்டன் பெண்கள் செலவிடுவது தெரிய வந்துள்ளது.
ஒப்பனை செய்யாமல் வீட்டை விட்டு வெளியே போவதில்லை என பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அழகுபடுத்திக் கொள்ளாமல் வெளியே செல்வோம் என 13 சதவீத பெண்கள் தைரியமாக தெரிவித்துள்ளனர்.
தங்கள் அழகை மேம்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா என யோசிப்பதாக 12 சதவீதம் பேரும், எடையைக் குறைத்தாலே அழகு கூடி விடும் என நான்கு சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக