புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகில் அதாவுல்லா சாயபு தெருவில் வசிப்பவர் தீனதயாளன்.  இவர் நேற்று தனது மனைவியுடன் வெளியில் சென்றார். வீட்டில் மகள் சர்மிளா(22) மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து நேற்று மாலை திடீரென புகை
வந்துள்ளது. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், சர்மிளா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வீட்டின் மற்றொரு அறையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு இளைஞரும் கழுத்து அறுக்கப்பட்டு, முகத்தில் பலத்த தீக்காயங்களுடன் மயங்கி கிடந்தனர்.

தகவலறிந்த அரக்கோணம் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு அரக்கோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சர்மிளாவுடன் வீட்டில் இருந்தது, அகன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதயதுல்லா என்பவரது மனைவி ஆஷா(27), பல்லூரை சேர்ந்த மாதவன்(30) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே அரக்கோணம் மருத்துவமனையில் இருந்து சர்மிளா வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஆஷா, மாதவன் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். இதில் ஆஷா பரிதாபமாக இறந்தார். ஆஷாவும், மாதவனும் சர்மிளா வீட்டுக்கு வந்தது ஏன்? இவர்கள் கழுத்தை அறுத்தது யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top