புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் புதூரை சேர்ந்தவர் மாரியப்பன், ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 13-ந்தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே பிணமாக கிடந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. அதன் காரணமாக மாரியப்பனை கொலை செய்ததாக முத்துலட்சுமியின் தம்பி முத்துக்குமார் உள்பட 7 பேர் நெல்லை கோர்ட்டில சரண் அடைந்தனர்.

இந்த வழக்கில் போலீசார் முத்துலட்சுமி மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த அவமானம் தாங்க முடியாமல் முத்துலட்சுமி தவித்து வந்து உள்ளார். நேற்றிரவு முத்துலட்சுமி அவரது தாயார் சந்திரா ஆகியோர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இருவரும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தாங்கள் தற்கொலை செய்து கொள்ள போவதாக உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்து உள்ளனர். அவர்கள் வருவதற்குள் இருவரும் பிணமாக தூக்கில் தொங்கினர்.

இது குறித்து தகவலறிந்த சிவகாசி டவுண் போலீசார் விரைந்து வந்து பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top