புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆண்களை விட பெண்களே, புத்திசாலிகளாக உள்ளனர் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அண்மையில் இரு பாலரிடமும் பொது அறிவு திறன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.


ஆய்வின் முடிவில் தெரியவந்த தகவல்கள், கடந்த 100 ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்களின் அறிவுத் திறன் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அதே சமயத்தில் அறிவுத் திறன் வளர்ச்சி ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக உள்ளது.

நவீன உலக சூழலில், நமது மூளை நிறைய விடயங்களை கிரகிக்கித்துக் கொள்வதால் பொது அறிவுத்திறன் வளர்ந்துள்ளது.

ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு மரபணு காரணமில்லை, அது மட்டுமே அறிவை வளர்க்க முடியாது என்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் நவீன வாழ்க்கை முறையும், ஊடகம் போன்ற பலமான தகவல் தொடர்புகளும் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணகளாக உள்ளன  என்பதும் தெரியவந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top