புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் மேற்கு வீதியைச்சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). இவரது மனைவி மஞ்சு (26). தினமும் காலையில் மஞ்சு தனது குழந்தையை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு கொண்டு போய் விடுவார். பள்ளி முடிந்ததும் மாலையில்
குழந்தையை திரும்ப அழைத்து வருவார்.

அப்போது கந்தம்பாளையத்தில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை பார்க்கும் தர்மபுரி மாவட்டம் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சக்திவேல் (25) என்பவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். மேலும் மஞ்சுவின் செல்நம்பரை தெரிந்து கொண்டு அவரிடம் போனிலும் பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் தனது கணவரிடம் தகவல் தெரிவித்தார். யுவராஜூம், அவரது அண்ணன் மயில்சாமியும் சேர்ந்து சக்திவேலை தட்டிக்கேட்டனர். ஆத்திரம் அடைந்த அவர் 2 பேரையும் கத்தியால் குத்தினார்.

இதில் மயில்சாமிக்கு கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியிலும், யுவராஜூக்கு தாடை மற்றும் சுண்டு விரலிலும் கத்திக்குத்து விழுந்தது. 2 பேரும் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிட மேஸ்திரி சக்திவேலை கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top