பாகிஸ்தானில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் கனேவல் பகுதியில் உள்ளது கச்சா குவு. இங்கு வசிப்பவர் சந்த்கான்.
இவருடைய மனைவிக்கு கடந்த 11ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் குழந்தையை பார்த்த சந்த்கான் முகம் சுளித்தார்.
குழந்தை அழகாக இல்லை, விகாரமாக இருக்கிறது என்று ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி 2 நாட்களே ஆன நிலையில், தனது பெண் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்து விட்டார்.
குழந்தையை புதைப்பதற்கு முன்பு இறுதி சடங்குகள் செய்துள்ளார். அப்போது சந்த்கானின் மகன், சகோதரர் இருந்துள்ளனர். இறுதி சடங்கு முடிந்ததும் குழந்தையை புதைத்தனர். அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
அதை கேட்ட மத குரு சந்தேகம் அடைந்து உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து செல்வதற்குள் குழந்தை இறந்துவிட்டது.
உடனே சந்த்கான், மகன், சகோதரர் ஆகிய 3 பேரையும் பிடித்து பொலிசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பொலிசார் விசாரணை நடத்திய போது, குழந்தையை உயிருடன் புதைத்து தெரியவந்தது.
இதுகுறித்து பிரசவம் பார்த்த மருத்துவர் ஓமர் பரூக் கூறுகையில், குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் முகம் மிகப்பெரியதாக இருந்தது. வழக்கத்துக்கு மாறான அளவை விட பெரிதாக இருந்தது என்று கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக