தான் சிறுமியாக இருந்தபோது தன்னைப் பலவந்தப்படுத்தி உறவு கொண்டு கர்ப்பமாக்கிய தனது அண்ணனை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண் டிரஸ்ஸா மிடில்டன்.
இவரது 11வது வயதில் இவருடைய அண்ணன் ஜேசன், பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம்செய்து விட்டார். அதில் கர்ப்பமானார் டிரஸ்ஸா. மிகவும் இளம் வயதில் தாயான பெண் என்ற பெயரும் அவருக்கு துரதிர்ஷ்டவசமாக கிடைத்தது.
அதன் பின்னர் போலீஸார் ஜேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் சமீபத்தில்தான் ஜேசன் வெளியே வந்தார். ஆனால் தனது வீட்டுக்குப் போகவில்லை. இந்த நிலையில், டிரஸ்ஸாவின் தாயார் சமீபத்தில் மரணமடைந்தார்.
இதையடுத்து தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தார் ஜேசன். அப்போது ஜேசனும், டிரஸ்ஸாவும் சந்தித்துக் கொண்டனர். ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை, மாறாக கண்ணீர் விட்டு அழுதனர். தனது தாயாருக்குச் செய்ய வேண்டியச் சடங்குகளை ஜேசன் செய்தார். அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் டிரஸ்ஸா.
பின்னர் டிரஸ்ஸா கூறுகையில், எனது தாயாரின் சவப்பெட்டியை தூக்கிச் செல்ல ஜேசன்தான் உதவினான். நானும், அவனும் மிகவும் நொறுங்கிப் போயுள்ளோம். எங்களுக்குள் பேச்சு இல்லை என்ற போதிலும், இருவரும் நிறைய அழுதோம்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஜேசனை நான் பார்க்கிறேன். எனக்கு அவன் மீது எந்த துவேஷமும் இல்லை. அவன் செய்தது தவறு என்று அவனுக்கும் தெரிந்திருக்கிறது. இருப்பினும் இதனால் எங்களது வாழ்க்கை அழிந்து போய் விடக் கூடாது என்று எனது தாயார் விரும்பினார். நானும் அவனை மன்னித்து விட்டேன் என்றார் டிரஸ்ஸா.
0 கருத்து:
கருத்துரையிடுக