புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தன்னுடைய காதலிக்கு ஆச்சரியமான பரிசு தர வேண்டும் என்பதற்காக, தன்னையே ஒரு பெட்டியில் அடைத்துக் கொண்டு விபரீதத்தை தேடிக் கொண்ட காதலனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாங்குயிங் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஹூ
செங்க். இவர் தன் காதலி லி வாங்க் என்பவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என முடிவு செய்தார்

அதற்காக தன் நண்பர்களின் உதவியுடன் ஒரு பெட்டியில் தன்னை அடைத்து சுற்றிலும் டேப் ஒட்டி கூரியர் மூலம் காதலிக்கு அனுப்பக் கூறியுள்ளார்.

அதன்படி அவரும் செங்க்கை கூரியர் மூலம் காதலிக்கு அனுப்பி வைக்க பார்சலை திறந்து பார்க்கும் போது, காதலி முகத்தில் ஏற்படும் இன்ப அதிர்ச்சியை படம் பிடிப்பதற்காக அவரது அலுவலகத்தில் கமெராவுடன் காத்திருந்தார் இன்னொரு நண்பர்.

எல்லாம் திட்டமிட்டபடியே நடந்தது. ஆனால் விலாசம் கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் பார்சல் சென்று சேர மூன்று மணி நேரம் வரை ஆகியுள்ளது. 30 நிமிடங்களில் பார்சல் சென்று சேர்ந்து விடும் அதை காதலி பிரித்து விடுவார் என நினைத்திருந்த செங்க்குக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பார்சல் காதலியைச் சென்று சேர்ந்த நேரத்தில் மயக்க நிலையில் கிடந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செங்க் குறிப்பிடுகையில், கூரியர் போய் சேர இவ்வளவு நேரமாகும் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை.

பெட்டிக்குள் ஓட்டை போட முடியாத போதும், கூச்சலிட்டு காதலிக்கு கொடுக்க இருந்த அதிர்ச்சியைக் கெடுக்க வேண்டாம் என எண்ணியதால் அமைதியாகக் கிடந்தேன் என்றார்.

கூரியர் நிறுவனத்தினர் கூறுகையில், இந்த விவகாரத்தை, அவர் முன்கூட்டியே எங்களிடம் கூறியிருந்தால், அதற்கு ஏற்றாற்போல் துளைகளுடன் உள்ள பெட்டியில் அவரை அடைத்த கொண்டு சேர்த்திருப்போம். வழக்கமாக விலங்குகள் அதுபோன்ற பெட்டிகளில் தான் அனுப்பி வைக்கப்படுகின்றன என்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top