புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் 20 வயதுப் பெண் ஒருவர், 14 வயதுப் பையனுடன் உறவு வைத்துக் கொண்டு அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்தார். அப்பெண்ணை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

இந்த புதுமைப் பெண்ணின் பெயர் பிரிட்டானி லெனாய் வெயன்ட். பென்சில்வேனியாவின், கிளேஸ்பர்க் பகுதியைச்சேர்ந்தவர். இவர் தற்போது குறைந்த வயதுடையவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரிட்டானி தற்போது பிளேர் கெளன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிறந்த குழந்தையை தற்போது பிரிட்டானியின் தாயார் பராமரித்து வருகிறார்.

சம்பந்தப்பட்ட பையனின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.அந்தப் பையனுடன் மோகம் கொண்ட பிரிட்டானி கடந்த டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் உறவு வைத்து வந்துள்ளார். இருவரும் விருப்பத்துட‌ன்தான் உறவு கொண்டுள்ளனர். தனது வீட்டுக்கு அருகில்தான் இருவரும் தனிமையில் சந்தித்து உறவு கொண்டுள்ளனர்.

கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது அந்தப் பையன் கூறுகையில்,எனது சம்மதத்துடன்தான் இந்த உறவு நீடித்தது. இருவரும் மனம் ஒத்துப் போய்தான் இதில் ஈடுபட்டோம். பிரிட்டானி கர்ப்பமடைந்தது எனக்குத் தெரியும். அவர் டாக்டரிடம் போனபோது நானும் உடன் போனேன் என்று கூறியுள்ளான்.

சம்மதத்துடன் நடந்த உறவு என்றாலும் கூட பென்சில்வேனியா சட்டப்படி சிறுவனுக்கு 14 வயதுதான் ஆகிறது என்பதால் இதை சட்டப்படி ஏற்க முடியாது என்பதால் பிரிட்டானி கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கம் போல டாக்டரிடம் பரிசோதனைக்குப் போனபோது அங்குள்ளவர்களுக்கு பிரிட்டானி மற்றும் அந்தப் பையன் மீது சந்தேகம் வந்துள்ளது. அவர்கள் போலீஸாருக்குத் தெரிவிக்கவே போலீஸார் வந்து பிரிட்டானியை விசாரித்து கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top