இன்று இணையம் ஆரம்பித்து ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது.இந்த ஒரு
வருடத்திற்குள் சாந்தை இணையத்திற்கு வருகை தந்து எம்மை மேலும் பல படிமுறைகளை கண்டு ஒரு இணைய உலகில் எம்மை தூக்கி வைத்த அன்பிற்கினிய வாசகர்களிற்கு முதற்கண் நன்றிகள்,இணையத்தின் நோக்கமானது பக்க சார்பில்லாதவாறு ,ஒரு நடுநிலைமையாக செய்திகளை கண்டறிந்து வெளியிட வேண்டும் என்ற ஒரு நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.இதற்கு மாற்றீடான செயல்கள் இடம்பெறும் பட்சத்தில் இரண்டு பக்க நியாயங்களையும் வெளியிட எமது இணையம் தவறவில்லை.இவ்வாறான நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இணையமானது எம்மவர்களின் நிகழ்வுகளை உலகறியச்செய்யும் சிந்தனையுடன், பல்சுவை அம்சங்களுடன் செய்திகளை வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது .
இணையமானது ஆரம்பித்த முதல் நாளே வாசகர்களை வரவழைத்தது.இது மேலும் இணையத்தை வளம்படுத்த வழிவகுத்தது.செய்திகளை உடனுக்குடன் தேடிப்பிடித்து இணைய வாசகர்களிற்கு இலகுவாக செய்திகளை படிக்க வழிவகுத்து,இன்றைய அவசர உலகில் வேலைப்பளு காரணமாக நேரமின்மை முக்கிய பிரச்சினையாக இருந்த போதிலும் ஓய்வான நேரங்களில் உறவுகளை மகிழ்விக்கும் பொருட்டு இணையத்தின் வடிவமைப்பில் பல மாற்றங்களுடன் மிகவும் நுணுக்கமான முறையில், ஒவ்வொரு அம்சங்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்து இன்றுவரை விடாமுயற்சியுடன் பணி தொடர்கிறது.
சோதனைகளை தாண்டி சாதனையுடன் இன்று வரை வெற்றி நடைபோடும் இணையமானது 22 -08-2012 ஒருவருடத்தை பூர்த்தி செய்துள்ளது.வாசகர்களாகிய உங்கள் வருகையும்,எங்கள ஆர்வமும் ஒன்று சேர்ந்து இணையத்தின் வளர்ச்சியை நிர்ணயித்தது எனலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக