புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

.யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் 15 வயதுச் சிறுமி 21 வயது இளைஞனால் கடத்தி செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்
 குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஊர்காவற்றுறைப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.


கடந்த 11 ஆம் திகதி ஊர்காவல்றுறைப் பகுதியில் இருந்த குறித்த சிறுமியை ஏமாற்றி யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற மேற்படி இளைஞர் அவரை யாழ்பாபணத்தில் வைத்து மயக்க மருந்து கொடுத்து மயக்கிய பின்னர் அங்கிருந்து கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த சிறுமியை ஏற்றிய இடத்திலேயே கொண்டு சென்று விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த சிறுமி அடையாளம் காட்டிய அச்சுவேலியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 இருவரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்பட்டுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறுமியை பாலியல் துஸ்பிரயோத்திற்கு உட்படுத்திய இளைஞனை விழக்கமறியலில் வைக்குமாறும், பதிக்கப்பட்ட சிறுமியை யாழ்.சிறுவர் நன்னடத்தைப் பள்ளியில் சேர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top